February 12, 2019 MTF

நலநோன்பு நிறுவனத்திற்கான உதவிகள்

வாழ்வகம் – சுண்ணாகம் 

யாழ் சுண்ணாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள வாழ்வகம் நிலையத்தில் தங்கி கல்விகற்கும் 55 மாணவர்களுக்கு, 02/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் விசேட மதிய உணவு மற்றும் அன்பளிப்புப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்கள் வழங்கியிருந்தார்கள்.

யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லம் – வன்னேரிக்குளம்

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள முப்பது பேருக்கு 09/02/2019 அன்று மருதடித் திண்ணை அறவாரியத்தினால் மூன்று வேளை விசேட உணவு வழங்கப்பட்டது.

மேலும் இந்த இல்லத்திலுள்ள 10 பெண் முதியவர்களுக்கு புடவையும், 20 ஆண் முதியவர்களுக்கு சேட்டும் வழங்கப்பட்டது.

இதற்கான நிதிப்பங்களிப்பை இந்துராணி ராசேந்திரம் அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவாக அவரது குடும்பத்தினரும், மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஆஸ்திரேலிய நண்பர்களும் சேர்ந்து வழங்கியிருந்தனர்.

 

, ,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.