March 25, 2019 MTF

உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு

கிளிநொச்சி வன்னேரிக்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள யோகர் சுவாமிகள் திருவடிநிலைய முதியோர் இல்லத்திலுள்ள 30 பெரியோர்களுக்கு உள ஆற்றுப்படுத்தல் நிகழ்வு மருதடி திண்ணை அறவாரியத்தினால் 17/03/2019 அன்று நடத்தப்பட்டது.

இதில் வளவாளராக மருதடி திண்ணை அறவாரியத்தின் பொருளாளரும், யாழ் பல்கலைக்கழக சித்த வைத்தியத்துறை விரிவுரையாளருமாகிய திரு த.விஜயகுமார் அவர்கள் பங்குபற்றியிருந்தார்.

நிகழ்வின் பின்னர் இல்லத்திலுள்ள பெரியோர்களுக்கு விசேட மதிய உணவும் வழங்கப்பட்டது.

நிகழ்விற்கான அனுசரணை : ஞான அருள்வாவ குடும்பத்தினர், லண்டன்.

, ,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.