கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் அன்றாட வருமானம் பெறும் குடும்பங்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளன. அந்த மக்களிற்கான உலர் உணவு விநியோகத்தினை மருதடித் திண்ணை அறவாரியம் கடந்த இரு நாட்களாக (01/04 , 02/04) மேற்கொண்டிருந்தது.
கிராம சேவகர்களின் உதவியுடன், மருதடித் திண்ணை அறவாரிய உறுப்பினர்கள் நேரடியாக உலர் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர்.
தெரிவுசெய்யப்பட்ட சில கிராம சேவகர்கள் பிரிவில் வசிக்கும் சுமார் 222 குடும்பங்களிற்கு, 505,050/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் 1500பேரிற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 10kg
மா – 5kg
பருப்பு – 2kg
சீனி – 1kg
கிராம சேவகர் பிரிவும், குடும்பங்களின் எண்ணிக்கையும்
J/129 சுதுமலை வடக்கு – 30
J/131 சாவல்கட்டு – 25
J/132 ஆனைகோட்டை – 25
J/135 நவாலி கிழக்கு – 25
J/136 நவாலி தெற்கு – 25
J/137 மானிப்பாய் – 25
J/138 மானிப்பாய் கிழக்கு – 25
J/139 நவாலி வடக்கு – 25
சண்டிலிப்பாய் பிரிவு – 10
மானிப்பாயில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் – 7