யாழ் கட்டுவன் J/239 கிராம சேவகர் பிரிவில் ஊரடங்கு வேளையில் அல்லலுற்ற 110 குடும்பங்களிற்கு இரவு உணவிற்காக 180 இறாத்தல் பாண், மருதடித் திண்ணை அறவாரியத்தினால் விநியோகம் செய்யப்பட்டது (08/04/20).
மட்டுப்படுத்தப்பட்ட வெளித் தொடர்பைக் கொண்டிருந்த இப்பிரதேச மக்களிற்கு இரவு உணவு தேவைப்படுவதாக விடுக்கப்பட்ட அவசர வேண்டுகோளினை ஏற்று, விரைந்து செயற்பட்ட மருதடித் திண்ணை அறவாரிய உறுப்பினர்கள், இரவு உணவிற்காக பாண் கொள்வனவு செய்து விநியோகம் செய்திருந்தனர்.