கொரோனா நோய்த்தாக்கத்தினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால், நெருக்கடிகளை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களிற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
அராலி, நவாலி, மானிப்பாய், சுன்னாகம், உரும்பிராய், புன்னாலைக்கட்டுவன் மற்றும் நுணாவில் பிரதேசங்களில் தெரிவுசெய்யப்பட்ட 197 குடும்பங்களிற்கு, 320,125 ருபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 800 இற்கும் மேற்பட்ட மக்கள் பயனடைந்தனர்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 5kg
மா – 5kg
பருப்பு – 1kg
சீனி – 1kg
தேயிலை – 150g
பயன்பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை,
அராலி – 25
நவாலி – 25
மானிப்பாய் – 39
கொக்குவில் – 25
உரும்பிராய் – 22
சுன்னாகம் – 07
புன்னாலைக்கட்டுவன் – 23
நுணாவில் – 31