புரேவி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மழை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதடி திண்ணை அறவரியத்தின் உதவிப் பணிகள் தொடர்கின்றன.
இதன் இரண்டாம் கட்டமாக, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, மாதகல் சாந்தபுரம் J/150 கிராமசேவகரின் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பத்து வீடுகளுக்கு ரூபாய் 30,000 பெறுமதியான நிலவிரிப்பு தறப்பார்கள் வழங்கப்பட்டது.