கொரோனா தொற்று பரவலின் காரணமாக முடக்கப்பட்டுள்ள J/131 கிராம சேவகர் பிரிவில் (சாவல்கட்டு) பாதிக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களுக்கான மருதடி திண்ணை அறவாரியத்தின் உதவி பொருட்கள் வழங்கும் திட்டம் இன்று (06/07/2021) இடம்பெற்றது.
முடக்கப்பட்ட பிரதேச மக்களை நேரடியாக சந்திக்க முடியாத காரணத்தினால், அங்குள்ள சனசமூக நிர்வாகத்திடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு பயனாளிகளுக்கு விநியோகிக்கப்பட்டது.
பயனாளிகளின் வேண்டுகோளிற்கிணங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா ஐந்து தேங்காய்களும், 1kg உப்புப் பொதியும் வழங்கப்பட்டது.
மொத்தமாக ரூபாய் 60,500 பெறுமதியான 1000 தேங்காய்களும், 200 1kg உப்புப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டது.