School/Children Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/category/mtf-school-kids-projects/ Non-Profit Organisation Fri, 14 Oct 2022 23:34:53 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 மாணவர்களுக்கான பயிற்சி நூல் வழங்கல் https://maruthadythinnai.org/kids-workbook-donation-oddusuddan/ Fri, 28 Jan 2022 06:14:45 +0000 https://maruthadythinnai.org/?p=1729 The post மாணவர்களுக்கான பயிற்சி நூல் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஈஸ்வரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 4 மற்றும் தரம் 5 ஐச் சேர்ந்த  28  மாணவர்களுக்கு வினாவிடை தொகுப்பு பயிற்சி நூல் புத்தகங்கள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.

பாடசாலை அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க, மருதடி திண்ணை அறவாரியத்தினால் மேற்படி செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை கனடாவைச் சேர்ந்த திரு.திஷாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.

About

The post மாணவர்களுக்கான பயிற்சி நூல் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
பாடசாலை மாணவருக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு https://maruthadythinnai.org/bicycle-donation-mtf/ Mon, 05 Jul 2021 03:31:39 +0000 https://maruthadythinnai.org/?p=1667 The post பாடசாலை மாணவருக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
team
கடந்த 11.02.2021 அன்று J/172 கிராம அலுவலர் பிரிவில் வசிக்கும் தந்தையை இழந்த பாடசாலை மாணவன் ஒருவருக்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் துவிச்சக்கர வண்டி ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
 
எமது திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.சுதன் அவர்களின் நண்பர்களின்  நிதி அன்பளிப்பின் மூலம் துவிச்சக்கர வண்டி கொள்வனவு செய்யப்பட்டு பாடசாலையில் வைத்து வழங்கப்பட்டது.
team

The post பாடசாலை மாணவருக்கு துவிச்சக்கர வண்டி அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு கையேடுகள் வழங்கல் https://maruthadythinnai.org/study-material-grade-6/ Tue, 14 Jul 2020 06:36:50 +0000 https://maruthadythinnai.org/?p=1588 The post மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு கையேடுகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் பாடசாலைகளின் செயற்பாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவாக, மாணவர்களுக்கு இடர்கால கற்றல் மேம்பாட்டு செயற்திட்ட கையேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை ஊக்குவிக்குமுகமாக, மருதடி திண்ணை அறவாரியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, யாழ்/மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்களுக்கான 100 இடர்கால கற்றல் மேம்பாட்டு செயற்திட்ட கையேடுகள் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த 10ம் திகதி (10/07/20) பாடசாலை அதிபரின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாணவர்களின் பெற்றோர்களிடம் செயற்திட்ட கையேடுகள் கையளிக்கப்பட்டது.

The post மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு கையேடுகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/nursery-kids-donations/ Thu, 11 Jun 2020 03:05:54 +0000 https://maruthadythinnai.org/?p=1556 The post முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகத் திறப்பு விழாவின்போது நவாலி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து முன்பள்ளிகளைச் சேர்ந்த 42 சிறுவர்களுக்கு தலா ரூபாய் 1000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முன்பள்ளிகள் மற்றும் மானவர்களின் எண்ணிக்கை விபரம்.

முருகானந்தா முன்பள்ளி – 12

நல்லாயன் முன்பள்ளி – 14

சுரபி முன்பள்ளி –  4

மதியொளி முன்பள்ளி – 3

வேலக்கை இந்து சமய விருத்திச்சங்க முன்பள்ளி – 9

மேலும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

The post முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/ration-food-kids/ Mon, 27 Apr 2020 10:17:59 +0000 https://maruthadythinnai.org/?p=1519 The post முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
team

சுதுமலை வடக்கிலுள்ள முன்பள்ளி ஒன்றில் கல்விபயிலும் 26 சிறார்களுக்கான உலர் உணவு பொருட்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் 24/04/20 அன்று வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பொருட்களாவன,
நெஸ்ரமோல்ட் பெட்டி – 01
சீனி – 1kg
தேயிலை -100g
சமபோசா – 01
பிஸ்கட் – 01

team

The post முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/mtf-project-kilinochchi-2020/ Mon, 24 Feb 2020 07:12:51 +0000 https://maruthadythinnai.org/?p=1385 The post கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி கரடிப்போக்கு, அறிவியல் நகர் மற்றும் ஆணைவிழுந்தான் பிரதேசஙகளில், மூண்று செயற்திட்டங்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் 22/02/2020 அன்று மேற்கொள்ளப்பட்டது.

கரடிப்போக்கு பிரதேசத்தில் வறிய நிலையிலுள்ள ஐந்து மாணவர்களுக்கு, தலா 4500.00 ரூபாய் பெறுமதியான கற்றல் ஊக்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

அறிவியல் நகரில், தந்தை தாய் அரவணைப்பின்றி சகோதரனுடைய பாதுகாப்பில் வசித்துவரும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு மேசை,கதிரை உள்ளிட்ட கற்றல் ஊக்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.

ஆணைவிழுந்தான் கிராமத்தில், தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்ப்பம் ஒன்றிற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.

மேற்படி செயற்திட்டங்களுக்கான நிதியுதவியை மருதடித் திண்ணை உறுப்பினர்களான சத்தியேந்திரா மற்றும் சுஜிதரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

The post கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
ஸ்மார்ட் திரை அன்பளிப்பு https://maruthadythinnai.org/smart-board-donation/ Fri, 08 Feb 2019 07:27:42 +0000 https://maruthadythinnai.org/?p=1259 The post ஸ்மார்ட் திரை அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

சுதுமலை வடக்கு தமிழ் கலவன் வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்  வகுப்பறைக்கு (smart class room), மருதடித்திண்ணை அறவாரியத்தின் ஊடாக ஸ்மார்ட் திரை (smart board) ஒன்று வழங்கப்பட்டது.

மருதடித்திண்ணை அறவாரியத்தின் உறுப்பினரான திரு.மோகனதாஸ் அவர்களின் அனுசரணையுடன் ஸ்மார்ட் திரை (smart board) மருதடித் திண்ணை அறவாரியத்தின் ஊடாக வழங்கப்பட்டது.

The post ஸ்மார்ட் திரை அன்பளிப்பு appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/vennerikulam-maha-vidyalayam-kilinochchi/ Sat, 19 Jan 2019 04:30:59 +0000 https://maruthadythinnai.org/?p=1187 The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான புத்தகப்பை மற்றும் அப்பியாசக் கொப்பிகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.

இதற்கான அனுசரணையை லண்டனில் வசிக்கும் திரு.திருமதி வாய்ஸ் ஞானாருள்பாபா குடும்பத்தினர் தமது மகனின் 15வது பிறந்தநாளினை முன்னிட்டு வழங்கியிருந்தனர்.

18/01/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில்எமது அமைப்பின் தலைவர், செயலாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.

The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
அறநெறிப் பாடசாலைக்கான நிதியுதவி https://maruthadythinnai.org/mannar-small-school-donation/ Sun, 02 Dec 2018 23:04:59 +0000 https://maruthadythinnai.org/?p=1139 The post அறநெறிப் பாடசாலைக்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மன்னார் மாவட்டம் முள்ளிக்கண்டல் பகுதியில் அமைந்துள்ள கலைமகள் அறநெறிப் பாடசாலைக்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் ரூபாய்.55,000 நிதி இன்று (02/12/2018) வழங்கப்பட்டது.
 
இந்த நிதி அறநெறிப் பாடசாலையின் நிலத்தளத்தினை பூரணப்படுத்தவும், சுவர்ப் பகுதியின் பூச்சு வேலைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.
 
இந்த நிதி வழங்கலை எமது அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முள்ளிக்கண்டல் பகுதிக்கு நேரில் சென்று கலைமகள் அறநெறிப் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.

The post அறநெறிப் பாடசாலைக்கான நிதியுதவி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/school-supplies-students-2017/ Fri, 27 Jul 2018 03:05:04 +0000 https://maruthadythinnai.org/?p=957 The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

18/10/2017, கற்றல் செயற்பாடுகளை ஊக்கப்படுத்தும் விதத்தில், உடுத்துறை மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மூன்று மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (தலா 4000/= பெறுமதியானவை) வழங்கப்பட்டது.

The post மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>