Maruthady Thinnai Foundation (MTF) Projects - 2020 https://maruthadythinnai.org/category/mtf-sri-lanka-projects-2020/ Non-Profit Organisation Fri, 12 Feb 2021 03:19:51 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 உலர் உணவுப் பொதிகள் வழங்கல் https://maruthadythinnai.org/cyclone-burevi-assistance/ Fri, 12 Feb 2021 03:08:48 +0000 https://maruthadythinnai.org/?p=1656 The post உலர் உணவுப் பொதிகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

பொன்னாலைக் கடலில் தொழிலிற்கு சென்றபோது புரேவி புயலால் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது (26/12/2020).

மேலும் அன்னாரின் குடும்பத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க, பிள்ளைகள் பாடசாலை சென்று வருவதற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் மருதடி திண்ணை அறவாரியத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.

இத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை கனடா வாழ் உறவுகள் வழங்கியிருந்தனர்.

The post உலர் உணவுப் பொதிகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் https://maruthadythinnai.org/burevi-cyclone-flood-mathagal/ Mon, 07 Dec 2020 12:21:42 +0000 https://maruthadythinnai.org/?p=1640 The post பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
About

புரேவி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மழை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதடி திண்ணை அறவரியத்தின் உதவிப் பணிகள் தொடர்கின்றன.

இதன் இரண்டாம் கட்டமாக, தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட, மாதகல் சாந்தபுரம்  J/150 கிராமசேவகரின் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பத்து வீடுகளுக்கு ரூபாய் 30,000 பெறுமதியான நிலவிரிப்பு தறப்பார்கள் வழங்கப்பட்டது.

About

The post பத்து வீடுகளுக்கு நிலவிரிப்பு தறப்பார்கள் விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவு விநியோகம் https://maruthadythinnai.org/cyclone-burevi-flood-relief/ Mon, 07 Dec 2020 03:17:11 +0000 https://maruthadythinnai.org/?p=1629 The post வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

புரேவி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மழை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதடி திண்ணை அறவரியத்தின் உதவிப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இதன் முதற் கடடமாக, J/132 கிராம சேவகரின் வேண்டுகோளிற்கிணங்க, காக்கைதீவு பிரதேசத்தில் தற்காலிகமாக முகாமில் தங்கியுள்ள 120 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

மேற்படி உணவு விநியோகம், பிரதேச செயலாளரினால் அமைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இரவு உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மரம் நடுகை செயற்திட்டம் 2020 https://maruthadythinnai.org/tree-planting-project-2020/ Sun, 22 Nov 2020 11:10:18 +0000 https://maruthadythinnai.org/?p=1616 The post மரம் நடுகை செயற்திட்டம் 2020 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடித் திண்ணை அறவாரியத்தின் 2020ம் ஆண்டிற்கான மர நடுகை செயற்திட்டம் இன்று (22/11) கல்லுண்டாய் பிரதேசத்தில் இடம்பெற்றது.

கல்லுண்டாய் வீட்டுத் திட்டத்தில் அமைந்துள்ள 60 இல்லங்களிற்கு தலா இரண்டு தென்னங் கன்றுகள் வீதம் மொத்தமாக 120 தென்னங்கண்றுகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.

The post மரம் நடுகை செயற்திட்டம் 2020 appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
தற்காலிக இருப்பிட வசதி https://maruthadythinnai.org/shelter-navaly-south/ Tue, 04 Aug 2020 02:07:32 +0000 https://maruthadythinnai.org/?p=1604 The post தற்காலிக இருப்பிட வசதி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

நவாலி தெற்கு கல்லுண்டாய் பிரதேசத்தில், வீடற்ற நிலையில் அவதியுற்ற தாய் மற்றும் இரு பிள்ளைகள் வதிவதற்கான கொட்டகை அமைப்பதற்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் ஆறு தூண்கள் மற்றும் கூரைத் தகரங்கள் என்பன வழங்கப்பட்டன. இவற்றுடன் தண்ணீர்த் தாங்கி ஒன்றும் வழங்கப்பட்டது.

J/136 கிராமசேவகரின் அவசர வேண்டுகோளினை ஏற்று, மருதடித் திண்ணை அறவாரியம் ரூபாய் 25,300 பெறுமதியான கட்டடப் பொருட்களை வழங்கியிருந்தது.

The post தற்காலிக இருப்பிட வசதி appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு கையேடுகள் வழங்கல் https://maruthadythinnai.org/study-material-grade-6/ Tue, 14 Jul 2020 06:36:50 +0000 https://maruthadythinnai.org/?p=1588 The post மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு கையேடுகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் பாடசாலைகளின் செயற்பாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவாக, மாணவர்களுக்கு இடர்கால கற்றல் மேம்பாட்டு செயற்திட்ட கையேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை ஊக்குவிக்குமுகமாக, மருதடி திண்ணை அறவாரியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, யாழ்/மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்களுக்கான 100 இடர்கால கற்றல் மேம்பாட்டு செயற்திட்ட கையேடுகள் வழங்கப்பட்டிருந்தன.

கடந்த 10ம் திகதி (10/07/20) பாடசாலை அதிபரின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாணவர்களின் பெற்றோர்களிடம் செயற்திட்ட கையேடுகள் கையளிக்கப்பட்டது.

The post மாணவர்களுக்கான கற்றல் மேம்பாட்டு கையேடுகள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் https://maruthadythinnai.org/nursery-kids-donations/ Thu, 11 Jun 2020 03:05:54 +0000 https://maruthadythinnai.org/?p=1556 The post முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகத் திறப்பு விழாவின்போது நவாலி பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஐந்து முன்பள்ளிகளைச் சேர்ந்த 42 சிறுவர்களுக்கு தலா ரூபாய் 1000 பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

முன்பள்ளிகள் மற்றும் மானவர்களின் எண்ணிக்கை விபரம்.

முருகானந்தா முன்பள்ளி – 12

நல்லாயன் முன்பள்ளி – 14

சுரபி முன்பள்ளி –  4

மதியொளி முன்பள்ளி – 3

வேலக்கை இந்து சமய விருத்திச்சங்க முன்பள்ளி – 9

மேலும் முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

The post முன்பள்ளி சிறுவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/food-rations-sandilpay-manipay/ Mon, 27 Apr 2020 11:35:07 +0000 https://maruthadythinnai.org/?p=1526 The post ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் பெரிய விளான், சண்டிலிப்பாய் மற்றும் மற்றும் மானிப்பாய் பகுதிகளில் இடம்பெற்றது (24/04/20).

கிராம சேவகர்களினால் தெரிவு செய்யப்பட்ட 75 குடும்பங்களுக்கு தேவையான உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 10kg
மா – 05kg
பருப்பு – 02kg
சீனி – 1kg
தேயிலை – 100g

The post ஐந்தாம் கட்ட உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் https://maruthadythinnai.org/ration-food-kids/ Mon, 27 Apr 2020 10:17:59 +0000 https://maruthadythinnai.org/?p=1519 The post முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
team

சுதுமலை வடக்கிலுள்ள முன்பள்ளி ஒன்றில் கல்விபயிலும் 26 சிறார்களுக்கான உலர் உணவு பொருட்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் 24/04/20 அன்று வழங்கப்பட்டது.

வழங்கப்பட்ட பொருட்களாவன,
நெஸ்ரமோல்ட் பெட்டி – 01
சீனி – 1kg
தேயிலை -100g
சமபோசா – 01
பிஸ்கட் – 01

team

The post முன்பள்ளி சிறார்களுக்கான உலர் உணவு விநியோகம் appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>
நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா https://maruthadythinnai.org/food-rations-distribution-vavuniya/ Thu, 23 Apr 2020 12:57:46 +0000 https://maruthadythinnai.org/?p=1502 The post நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் வவுனியா தவசிகுளம் மற்றும் நாகர் இலுப்பங்குளம் பகுதிகளில் இடம்பெற்றது (22/04/20).

பெற்றோர்களை இழந்து பேரன் பேத்திகளின் பராமரிப்பில் வாழும் சிறு குழந்தைகள் அடங்கிய குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பம் என்ற வகுதிக்குள் அடங்கும் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

மருதடி திண்ணை அறவாரியத்தின் உறுப்பினர் திரு.நந்தசீலன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த செயற்திட்டத்தில், இப்பிரதேச கிராம சேவகர், மகளிர் அமைப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட சிறுவர் பண்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 5kg
மா – 5kg
பருப்பு – 1kg
சீனி – 1kg
தேயிலை – 150g

The post நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>