பொன்னாலைக் கடலில் தொழிலிற்கு சென்றபோது புரேவி புயலால் அலையில் அடித்துச் செல்லப்பட்டு மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு மருதடி திண்ணை அறவாரியத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது (26/12/2020).
மேலும் அன்னாரின் குடும்பத்தினரால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க, பிள்ளைகள் பாடசாலை சென்று வருவதற்கு துவிச்சக்கர வண்டி ஒன்றும் மருதடி திண்ணை அறவாரியத்தினால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான நிதிப்பங்களிப்பினை கனடா வாழ் உறவுகள் வழங்கியிருந்தனர்.