புரேவி புயல் மற்றும் அதன் பின்னர் ஏற்பட்ட மழை வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருதடி திண்ணை அறவரியத்தின் உதவிப் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.
இதன் முதற் கடடமாக, J/132 கிராம சேவகரின் வேண்டுகோளிற்கிணங்க, காக்கைதீவு பிரதேசத்தில் தற்காலிகமாக முகாமில் தங்கியுள்ள 120 பேருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.
மேற்படி உணவு விநியோகம், பிரதேச செயலாளரினால் அமைக்கப்பட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவினூடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.