சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்தும் இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகிறது.
இன்று (29/11/24) எமது அமைப்பினால் மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
காலை, இருபாலை கிழக்கில் 50 பேருக்கு காலை உணவாக கறி பணிஸ் விநியோகம் இடம்பெற்றது.
மதியம் முருகமூர்த்தி பாடசாலை முகாம் (35 pkts), ஸ்கந்தவரோதயா கல்லூரி (15 pkts), விசாலாட்ச்சி பாடசாலை (21 pkts) ஆகிய இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள பெண்களுக்கு தேவையான 71 Sanitary Napkins packets வழங்கப்பட்டது.
மாலை, மல்லாகம் விசாலாட்சி பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள 600 பேருக்கு சமைத்த நூடில்ஸ் கறியுடன் இரவு உணவாக வழங்கப்பட்டது.
மேற்படி திட்டங்களுக்கு அமைப்பின் நிதியுடன் மருதடித் திண்னையின் உறுப்பினர்களான சசி(25,000/=) மற்றும் டக்ஸன்(15,000/=) ஆகியோர் வழங்கிய நிதியும் பயன்படுத்தப்பட்டது.