சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் தொடர்ந்து ஆறாவது நாளாக முன்னெடுத்து வருகின்றது.
இன்று (05/12/24) எமது அமைப்பினால் கிளிநொச்சி மாவட்டத்தில் அம்பாள் நகர் மற்றும் பொன்நகர் பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூபாய் 2,500 பெறுமதியான 91 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு பொதியிலும் அரிசி (3kg), கோதுமை மா (3kg), சீனி (1kg), பருப்பு(1kg), தேயிலை (250g) என்பன உள்ளடக்கப்பட்டிருந்தன.
இந்த திட்டத்திற்கான நிதி உதவியை லண்டன் அருள்மிகு உச்சி முருகன் கோவில் நிர்வாகத்தினர் வழங்கியிருந்தனர். நிதி ஒழுங்குபடுத்தல்களை எமது உறுப்பினர் திரு சாந்தன் அவர்கள் மேற்கொண்டிருந்தார்.