தற்போது ஏற்பட்டுள்ள கடும் மழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கான உதவிகளை மருதடித் திண்ணை அறவாரியம் ஆரம்பித்துள்ளது.
இதற்கமைய முதற்கட்டமாக யா/ஸ்கந்தவரோதயா ஆரம்ப பாடசாலை இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களின் வேண்டுகோளிற்கிணங்க, அவசர உதவியாக நுளம்புத்திரி, தீப்பெட்டி, நாப்கின் என்பவற்றுடன் பிஸ்கட், அங்கர் பால்மா, சீனி, தேயிலை போன்ற பொருட்கள் இன்று (28/11/24) மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.