கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டு, பன்னங்கட்டி பிரதேச பாடசாலையொன்றில் தஞ்சமடைந்திருந்த 65 குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.
23/12/2018 அன்று, எமது அமைப்பின் உறுப்பினர்கள் நேரடியாக பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு சென்று மக்களிடம் பொதிகளைக் கையளித்தனர்.