April 3, 2020 MTF

உலர் உணவு விநியோகம்

கொரோனா நோய்த்தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டத்தினால் அன்றாட வருமானம் பெறும் குடும்பங்கள் பல இன்னல்களை எதிர்நோக்கியுள்ளன. அந்த மக்களிற்கான உலர் உணவு விநியோகத்தினை மருதடித் திண்ணை அறவாரியம் கடந்த இரு நாட்களாக (01/04 , 02/04)  மேற்கொண்டிருந்தது.

கிராம சேவகர்களின் உதவியுடன், மருதடித் திண்ணை அறவாரிய உறுப்பினர்கள் நேரடியாக உலர் உணவு விநியோகத்தில் ஈடுபட்டிருந்தனர்.

தெரிவுசெய்யப்பட்ட சில கிராம சேவகர்கள் பிரிவில் வசிக்கும் சுமார் 222 குடும்பங்களிற்கு, 505,050/= பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதன் மூலம் 1500பேரிற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட  உலர் உணவுப் பொருட்களாவன,

அரிசி – 10kg
மா – 5kg
பருப்பு –  2kg
சீனி – 1kg

கிராம சேவகர் பிரிவும், குடும்பங்களின் எண்ணிக்கையும்

J/129 சுதுமலை வடக்கு – 30
J/131 சாவல்கட்டு – 25
J/132 ஆனைகோட்டை – 25
J/135 நவாலி கிழக்கு – 25
J/136 நவாலி தெற்கு – 25
J/137 மானிப்பாய் – 25
J/138 மானிப்பாய் கிழக்கு – 25
J/139 நவாலி வடக்கு – 25
சண்டிலிப்பாய் பிரிவு – 10
மானிப்பாயில் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்கள் – 7

,

MTF

Maruthady Thinnai Foundation is dedicated to serve the children, families, communities and protecting the environment in Sri Lanka.