முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஈஸ்வரன் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 4 மற்றும் தரம் 5 ஐச் சேர்ந்த 28 மாணவர்களுக்கு வினாவிடை தொகுப்பு பயிற்சி நூல் புத்தகங்கள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டது.
பாடசாலை அதிபரின் வேண்டுகோளிற்கிணங்க, மருதடி திண்ணை அறவாரியத்தினால் மேற்படி செயற்திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்திற்கான நிதிப் பங்களிப்பை கனடாவைச் சேர்ந்த திரு.திஷாந்தன் அவர்கள் வழங்கியிருந்தார்.