மன்னார் மாவட்டம் முள்ளிக்கண்டல் பகுதியில் அமைந்துள்ள கலைமகள் அறநெறிப் பாடசாலைக்கு, மருதடித் திண்ணை அறவாரியத்தினால் ரூபாய்.55,000 நிதி இன்று (02/12/2018) வழங்கப்பட்டது.
இந்த நிதி அறநெறிப் பாடசாலையின் நிலத்தளத்தினை பூரணப்படுத்தவும், சுவர்ப் பகுதியின் பூச்சு வேலைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்படும்.
இந்த நிதி வழங்கலை எமது அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் முள்ளிக்கண்டல் பகுதிக்கு நேரில் சென்று கலைமகள் அறநெறிப் பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தனர்.