மருதடி திண்ணை அறவாரியத்தின் அலுவலகம் நவாலி CPM வீதியில், கடந்த 7ம் திகதி திறந்து வைக்கப்பட்டது.
தலைவர் ம.விஜேந்திரன் தலமையில் இடம்பெற்ற இவ்விழாவில், பிரதம விருந்தினராக கலந்துகொண்டிருந்த திரு.சி.நாகையா (ஓய்வு நிலை அதிபர், பணிப்பாளர் – கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை) அவர்கள் நாடாவை வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார்.
சிறப்பு விருந்தினராக திரு.எஸ்.பாஸ்கரன் (கிராம அலுவர்) அவர்கள் கலந்துகொண்டிருந்தார். நிகழ்வின் இறுதியில் முன்பள்ளி மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.