கிளிநொச்சி கரடிப்போக்கு, அறிவியல் நகர் மற்றும் ஆணைவிழுந்தான் பிரதேசஙகளில், மூண்று செயற்திட்டங்கள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் 22/02/2020 அன்று மேற்கொள்ளப்பட்டது.
கரடிப்போக்கு பிரதேசத்தில் வறிய நிலையிலுள்ள ஐந்து மாணவர்களுக்கு, தலா 4500.00 ரூபாய் பெறுமதியான கற்றல் ஊக்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
அறிவியல் நகரில், தந்தை தாய் அரவணைப்பின்றி சகோதரனுடைய பாதுகாப்பில் வசித்துவரும் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவருக்கு மேசை,கதிரை உள்ளிட்ட கற்றல் ஊக்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
ஆணைவிழுந்தான் கிராமத்தில், தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்ப்பம் ஒன்றிற்கு, அத்தியாவசிய உணவுப் பொருட்களுடன், கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது.
மேற்படி செயற்திட்டங்களுக்கான நிதியுதவியை மருதடித் திண்ணை உறுப்பினர்களான சத்தியேந்திரா மற்றும் சுஜிதரன் ஆகியோர் வழங்கியிருந்தனர்.