யாழ் கோப்பாய் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட 20 பயனாளிகளுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் மருதடி திண்ணை அறவாரியத்தினால் 04/09/2022 அன்று வழங்கப்பட்டது.
ரூபாய் 2,000 பெறுமதியான உலர் உணவுப் பொதியில் பின்வரும் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
அரிசி – 2kg
மாவு – 1.1kg
சீனி – 1kg
பருப்பு – 500g
தேயிலை – 250g
சோயா – 2 packs
இதேவேளை தெரிவு செய்யப்பட்ட 40 பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கு தேவையான விதைகளும் வழங்கப்பட்டன.
மேற்படி இரு செயற்திட்டங்களுக்குமான நிதி உதவியினை லண்டனைச் சேர்ந்த திரு.கஜேந்திரன் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.
மருதடி திண்னை அறவாரியத்தின் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் சதீசன் அவர்களினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த மேற்படி நிகழ்வில், தலைவர் சிவச்செல்வன், செயலாளர் சுதன், பொருளாளர் பத்மநாதன் மற்றும் உறுப்பினர் முகுந்தன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.