கடந்த வெள்ளிக்கிழமை (27/05/22) நவாலி தெற்கு கிராம சேவகர் பிரிவில், கிராம சேவகரினால் தெரிவு செய்யப்பட்ட 30 வறுமைக் கோட்டிற்குட்பட்ட குடும்பங்களிற்கு அரிசி மற்றும் தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 3kg அரிசியும், இரண்டு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டன. மேற்படி உதவித் திட்டத்திற்கான நிதி உதவியினை ராம் சகோதரர்கள் வழங்கியிருந்தார்கள்.
மேற்படி நிகழ்வில் MTF அமைப்பின் சார்பாக செயலாளர் செல்வச்சந்திரன், பொருளாளர் செல்வன் மற்றும் செயற்திட்ட ஒருங்கிணைப்பாளர் சுதன் ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.