தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா நோய்த்தொற்று காரணமாக நாட்டில் பாடசாலைகளின் செயற்பாடு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே கல்விச் செயற்பாடுகளை முன்னெடுக்க ஏதுவாக, மாணவர்களுக்கு இடர்கால கற்றல் மேம்பாட்டு செயற்திட்ட கையேடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதனை ஊக்குவிக்குமுகமாக, மருதடி திண்ணை அறவாரியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள செயற்திட்டத்தின் முதற்கட்டமாக, யாழ்/மானிப்பாய் இந்துக் கல்லூரியில் கல்வி பயிலும் தரம் 6 மாணவர்களுக்கான 100 இடர்கால கற்றல் மேம்பாட்டு செயற்திட்ட கையேடுகள் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த 10ம் திகதி (10/07/20) பாடசாலை அதிபரின் தலமையில் இடம்பெற்ற நிகழ்வில், மாணவர்களின் பெற்றோர்களிடம் செயற்திட்ட கையேடுகள் கையளிக்கப்பட்டது.