Vavuniya Archives - Maruthady Thinnai Foundation (MTF) https://maruthadythinnai.org/tag/vavuniya/ Non-Profit Organisation Thu, 23 Apr 2020 13:11:49 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.7.1 நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா https://maruthadythinnai.org/food-rations-distribution-vavuniya/ Thu, 23 Apr 2020 12:57:46 +0000 https://maruthadythinnai.org/?p=1502 The post நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>

மருதடி திண்ணை அறவாரியத்தின் நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் வவுனியா தவசிகுளம் மற்றும் நாகர் இலுப்பங்குளம் பகுதிகளில் இடம்பெற்றது (22/04/20).

பெற்றோர்களை இழந்து பேரன் பேத்திகளின் பராமரிப்பில் வாழும் சிறு குழந்தைகள் அடங்கிய குடும்பங்கள் மற்றும் பெண் தலைமைத்துவக் குடும்பம் என்ற வகுதிக்குள் அடங்கும் குடும்பங்கள் என தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு உலர் உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டன.

மருதடி திண்ணை அறவாரியத்தின் உறுப்பினர் திரு.நந்தசீலன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த செயற்திட்டத்தில், இப்பிரதேச கிராம சேவகர், மகளிர் அமைப்பு அதிகாரிகள் மற்றும் மாவட்ட சிறுவர் பண்பாட்டு உத்தியோகத்தர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட உலர் உணவுப் பொருட்களாவன,
அரிசி – 5kg
மா – 5kg
பருப்பு – 1kg
சீனி – 1kg
தேயிலை – 150g

The post நான்காம் கட்ட உலர் உணவு விநியோகம் – வவுனியா appeared first on Maruthady Thinnai Foundation (MTF).

]]>