கிளிநொச்சி மாவட்டம் வன்னேரிக்குளம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் 42 மாணவர்களுக்கு தலா 1000 ரூபாய் பெறுமதியான புத்தகப்பை மற்றும் அப்பியாசக் கொப்பிகள் மருதடித் திண்ணை அறவாரியத்தினால் வழங்கப்பட்டன.
இதற்கான அனுசரணையை லண்டனில் வசிக்கும் திரு.திருமதி வாய்ஸ் ஞானாருள்பாபா குடும்பத்தினர் தமது மகனின் 15வது பிறந்தநாளினை முன்னிட்டு வழங்கியிருந்தனர்.
18/01/2019 அன்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில், எமது அமைப்பின் தலைவர், செயலாளர், திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் பங்குபற்றியிருந்தனர்.